நாட்டில் சில வீதிகள் மூடல் !
நாட்டின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை (24) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரான் ஜனாதிபதி இன்றையதினம் இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையிலேயே, இந்த வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அந்தவகையில், கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள வீதிகள் மூடப்படவுள்ளன.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையும், இரவு 9.30 முதல் 10.30 வரையும் மூடப்படவுள்ளது.
அத்துடன், மத்தல, தனமல்வில, வெல்லவாய மற்றும் உமாஓயா வீதிகள் இன்று முற்பகல் 9.45 முதல் 11 மணி வரை மூடப்படவுள்ளன.
மேலும், கொழும்பு நகரின் சில வீதிகளும் இன்று மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments