பாதாள குழு உறுப்பினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி
பிரதான பாதாள குழு உறுப்பினர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த போதே நேற்றையதினம்(28) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தானியங்கி இயந்திரம்
அதன்போது, அண்மையில் விமான நிலையத்தில் பொருத்தப்பட்ட தானியங்கி அடையாள இயந்திரத்தின் மூலம் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் டிஐஜி சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
No comments