இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி பண்ணை நுவரெலியாவில்
இலங்கையின் முதலாவது ஸ்ட்ராபெரி சாகுபடி மாதிரிக் கிராமத்தை நுவரெலியாவில்(Nuwara Eliya ) நிறுவுவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் முதல் கட்டமாக நுவரெலியாவில் 40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு, ஸ்ட்ராபெரி செடிகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் மற்றும் நீர் விநியோகம் வழங்கப்படவுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு ஒரு விவசாயிக்கு தலா 13 இலட்சம் ரூபா செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 750,000 ரூபா விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்டுவதோடு, மீதமுள்ள 6 இலட்சத்தை அந்தந்த விவசாயிகள் முதலீடு செய்ய வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஸ்ட்ராபெரி திட்டத்திற்கு 40 பாதுகாப்பான பச்சை வீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வீடுகள் அனைத்தையும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் முழுமையாக தானியங்கி முறையில் செயல்படுத்த முடியும் என்றும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments