இலங்கைக்கு வந்து குவிந்துள்ள ஈரான் அதிபரின் பாதுகாவலர்கள்
ஈரான் அதிபரின் பாதுகாவலர்கள் பலர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இன்று (24) இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.
ஈரானிய உதவியில் கட்டப்பட்ட உமாஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்து வைப்பதற்காக இந்த விஜயம் அமைந்துள்ளது.
நிகழ்வு மைதானத்தில் சோதனை
தற்போது ஈரான் அதிபரின் பாதுகாப்புக்காக ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் பலர் இலங்கை வந்துள்ளனர்.
அவர்கள் ஈரான் அதிபரின் வழித்தடத்தில் தங்கள் அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் நிகழ்வு மைதானத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் அதிபர் மத்தள விமான நிலையத்திலிருந்து
ஈரான் அதிபர் மத்தள விமான நிலையத்திலிருந்து இலங்கை வரவுள்ளார், பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட பின்னர் உமா ஓயாவுக்குச் சென்று பின்னர் ஈரான் திரும்புவார்.
No comments