அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! அதிகரிக்கப்படும் ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம்
ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது 8 வீதமாக உள்ள வட்டி வீதம் 13 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர்களுக்கான சலுகைகளை அதிகரிக்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சீரான முதலீடுகள்
இலங்கையில் தற்போது சீரான முறையில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஞ்சித் சியம்பலப்பிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு, ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுமார் 27 இலட்சத்திற்கும் அதிக ஊழியர்களின் சேமலாப நிதியம், இந்த வட்டி வீத அதிகரிப்பின் மூலம் பல நன்மைகளை பெற்றுத் தரும் என நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments