Vettri

Breaking News

துஷ்மந்த சமீர குறித்து வந்த தகவல்!




 

துஷ்மந்த சமீர குறித்து வந்த தகவல்!



தற்போது நடைபெற்றுவரும்  ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர விளையாட உள்ளார்.

அவர் இன்று முதல் முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகின்றமை விசேடம்சமாகும்.

இம்முறை ஐபிஎல் ஏலத்தில் 50 இலட்சம் இந்திய ரூபாவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி துஷ்மந்த சமீரவை வாங்கியிருந்தது.

  இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் Gus Atkinson க்கு பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் துஷ்மந்த சமீர விலைக்கு வாங்கப்பட்டிருந்தார்.

துஷ்மந்த சமீரா இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த நிலையில், 2021 இல் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியுள்ளார்.

இவர் 2022 ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

No comments