குற்றப் புலனாய்வு அதிகாரிகள் எனக் கூறி இலஞ்சம் பெற்றவர்கள் கைது!
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு ஒரு கோடி ரூபா இலஞ்சம் பெறப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ஒரு கோடி ரூபா இலஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படும் பெண் சந்தேக நபர் உள்ளிட்ட நால்வர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி வீடொன்றிற்கு சென்ற பெண் உள்ளிட்ட நால்வர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் எனக் கூறி அங்கிருந்து ஒரு கோடியே 20 ஆயிரம் ரூபா டொலர்களை பெற்றுச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments