சுமார் 70 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த போதைப்பொருளை கடத்தும் “ரதுல் குமார” வின் பிரதான சகாக்களில் ஒருவர் சுமார் 70 இலட்சம் பெறுமதியான 25 கிலோ கஞ்சாவுடன் களுத்துறை குற்றப்புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா போதைப்பொருள் விநியோகிப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடுவலை வெலவிட்ட நகரில் மற்றுமொரு நபருக்கு வழங்குவதற்காக வைத்திருந்த 02 கிலோ கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கைது செய்யப்பட்ட நபர் தெமட்டகொடை சாமர நிரோஷன் என்ற 47 வயதுடையவராவார்.
மேலும் , சந்தேக நபரிடத்தில் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போது கடுவலை வெலவிட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்திருந்த 23 கிலோ கிராம் கஞ்சா பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
No comments