50 வயதுக்கு மேற்பட்ட உலக அழகி போட்டி : இலங்கை பெண் வெற்றி
அமெரிக்காவில் நடைபெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய திருமதி துஷாரி ஜெயக்கொடி, இயக்குனர் ராணியாக வெற்றி பெற்று 04/28 காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
37 நாடுகள் பங்கேற்ற இந்த உலக அழகி போட்டி 04/21 முதல் 04/25 வரை அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் நடைபெற்றது.
உலக அழகிகளுக்கு மத்தியில் பெரும் போட்டி
37 நாடுகளில் இருந்து பங்கேற்ற உலக அழகிகளுக்கு மத்தியில் பெரும் போட்டி நிலவியதாகவும், அவற்றில் மிஸ் போர்ட் பட்டத்தை வெல்வது இலங்கைக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்றும் திருமதி துஷாரி ஜெயக்கொடி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெரிவித்தார்.
50 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் இலங்கையில் நடைபெற்ற போட்டியில் மிஸ் சிறிலங்காவாக வெற்றி பெற்று, இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்கா சென்றிருந்தார்.
No comments