2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது!
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் நேற்று திங்கட்கிழமை (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜமுத்துக்களை பொலிஸார் கைப்பற்றப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments