சன் டிவி நிகழ்ச்சியில் களமிறங்கும் நடிகர் வடிவேலு.. அப்போ இனிமேல் நம்பர் 1 நிகழ்ச்சி இதுதான்
டாப் குக்கு டூப் குக்கு
குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியில் புதிதாக துவங்கவிருக்கும் நிகழ்ச்சி தான் டாப் குக்கு டூப் குக்கு. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி, பின் அதிலிருந்து வெளியேறிய செஃப் வெங்கடேஷ் பட் தான் இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார்.
நேற்று இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை அதிரடியாக சன் டிவி வெளியிட்டது. குக் வித் கோமாளியில் கலக்கிக்கொண்டிருந்த ஜி.பி. முத்து, மோனிஷா, பரத், தீபா உள்ளிட்டோர் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளனர்.
மேலும் விஜய் டிவியின் டாப் நட்சத்திரமாக இருந்த நடிகர் KPY தீனாவும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார் என நேற்று ப்ரோமோவில் தெரிந்தது. இப்படி அதகளம் பண்ணும் நபர்களுடன் இணைந்து யார் சமைக்க போகிறார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
வடிவேலு
இந்த நிலையில், டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு நடிகர் வைகை புயல் வடிவேலு வரவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்டுள்ளாராம். சன் நிறுவனம் அந்த தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டால், கண்டிப்பாக டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் வடிவேலு பங்கேற்பார் என கூறப்படுகிறது.
அப்படி வடிவேலு மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் கண்டிப்பாக டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி நம்பர் 1 ஆக மாறும் என்பதிலும் எந்த வித சந்தேகமும் இல்லை என்கின்றனர். இந்த தகவலை பிரபல மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments