Vettri

Breaking News

தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்க நடவடிக்கை !!




 நாட்டின் தொல்பொருள் பாரம்பரியங்களை கண்டறிதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குதல் ஆகியவற்றை முறையாக முன்னெடுப்பதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.


அதிபர் ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் விதுர குறித்த விடயத்தை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கடினமான சூழ்நிலையில் பராமரிக்கப்படும் புனிதத் தலங்களை பாதுகாப்பதற்கு அவசியமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை வழங்குவதில் எமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் தற்பொழுது சரிபார்க்கப்படுகின்றன என்றார்.

மேலும், 2024 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த புனிதத் தலங்களுக்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை வழங்குவதே அமைச்சின் எதிர்பார்ப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


No comments