பாதையில் மரம் முறிந்து வீழ்ந்ததால் மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!!!
நாவலப்பிட்டி மற்றும் இங்குரு ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) ரயில் பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பதுளையிலிருந்து இயக்கப்பட்ட விசேட அதிவேக ரயில் ஏற்கனவே இங்குரு ஓயா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த மரத்தை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
No comments