"தவக்காலத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்!!
"நாம் வளர" சமூக மேம்பாட்டுப் பேரவை - சொறிக்கல்முனை அமைப்பினரால் அன்று (10/03/2024) காலை 09 மணியளவில் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
இவ் இரத்ததான முகாமானது சொறிக்கல்முனைக் கிராமத்தின் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டு திருச்சிலுவை திருத்தல புனித ஜோசப்வாஸ் மண்டபத்தில் இடம்பெற்றது..
கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்ததான குழுவினரின் ஆதரவுடன் 40 குருதி நன்கொடையாளர்களால் குருதி நன்கொடை வழங்கப்பட்டது. குருதி நன்கொடையாளர்களுக்கு நாம் வளர அமைப்பினரால் ஞாபகார்த்த சின்னமாக கீட்டக் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த நாம் வளர சமூகத்தினருக்கும்,ஏனைய ஊழியர்களுக்கும், அனைத்து இரத்த நன்கொடையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்..
செய்தியாளர்
க.டினேஸ்
No comments