Vettri

Breaking News

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நிய செலாவணி அதிகரிப்பு...




 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.


கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நிறுவனத்தின் டொலர் வருமானம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய வருமான அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கையின் மூலம் ஈட்டிய வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதுவே அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உலக சந்தை நிலவரங்களுக்கு அமைவாக மேற்கொள்ளும் செலவினங்களின் அடிப்படையில் எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

No comments