Vettri

Breaking News

மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!












 செ.துஜியந்தன் 

இன்று (03-03-2004)மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் ஏற்பாட்டில் களுதாவளை சமூக பொருளாதார கல்வி அபிவித்திச்சங்கம்,  கட்டாரில் தொழில் புரியும் உறவுகளின் பிரதான அனுசரணையில்  பொருளாதார நிலையில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையில் அதன் தலைவர் அகரம் செ.துஜியந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் களுதாவளை சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் கிஷோபன், ஆசிரியர் வரதராஜன்,  அபிவிருத்தி உத்தியோகத்தர் க.கேதாகரன், மாற்றுத்திறனாளிகளின் தலைவர் பவளராணி, ஆலோசகர் குலேந்திரன், சமூக செயற்பாட்டாளர் கே.கருணேஸ்வரன், சீடா அமைப்பின் எஸ் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைக்காக பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments