மக்களுக்கு நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்: ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!!!
தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி, மக்களுக்கு நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துப் பிரதேச செயலாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும், பிரதேச செயலாளர்களுடனும் நேற்று (15) கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பின்னர், இந்த ஆண்டு 2024 இல் மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்ட எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்த அவர், 2019 ஆம் ஆண்டில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டது என்பதை நினைவுப்படுத்தியுள்ளார்.
2 வீதம் பொருளாதார வளர்ச்சி
அத்தோடு, கோவிட் தொற்றினால், 2022 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகமாகக் குறைந்தது என்றும், எனினும், பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து கடந்த இரண்டு வருடங்களாக பொருளாதாரத்தை சீர்செய்ய முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்
இதன்படி, 2024ஆம் ஆண்டில் 2 வீதம் பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு 2 வீதம் வளர்ச்சியை எட்டினாலும், 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலையை அடைவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். இருப்பினும், 2027 அல்லது அதற்கு முன்னதாக அந்த இலக்கை அடைய வேண்டும் என்று நான் இலக்கு வைத்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.
No comments