இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு விஜயம் செய்யும் தூதுக்குழு!!!
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (27) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இந்தியாவுடன் ஏற்படுத்தப்படவுள்ள தரைவழித் தொடர்பு குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளையதினம் (28) புதுடெல்லியில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சு சமர்ப்பித்த அறிக்கை
குறித்த தூதுக்குழுவில் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர்கள், தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர், சுங்கத் திணைக்களத்தின் பொது இயக்குநர் மற்றும் தலைமைப் பணியாளர் அலுவலகத்தின் பொது இயக்குநர் ஆகியோர் அடங்குகின்றனர்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு சமர்ப்பித்த அறிக்கையையும் கலந்துரையாடலுக்கு தூதுக்குழுவினர் தங்களுடன் எடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments