துப்பாக்கி வைத்திருப்பவர்களை அடையாளம் காட்டுவோருக்கு சன்மானம் வழங்க தீர்மானம்!!
துப்பாக்கிகள் மற்றும் ஏனைய ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்களை அடையாளம் காட்டுவோருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தீர்மானித்துள்ளார்.
குற்றங்களை தடுக்கும் நோக்கத்திற்காக துப்பாக்கிகள் மற்றும் ஏனைய ஆயுதங்களை வைத்திருப்பவர்களை கைது செய்வதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வெகுமதிகள் இம்மாதம் 23ஆம் திகதி முதல் அடுத்த இரண்டு மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதனால், துப்பாக்கிகள் மற்றும் அவற்றை வைத்திருக்கும் குற்றவாளிகள் தொடர்பில் தகவல்களை காவல்துறையினருக்கு வழங்குபவர்கள் இந்த வெகுமதிப் பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
AA வகை துப்பாக்கிகளுக்கு 50,000 ரூபாய் முதல் 500,000 ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி தானியங்கி துப்பாக்கிகளான டீ 56, ஏ.கே 47, எம் 16 எஸ்.ஏ.ஆர் 80, டீ 81 துப்பாக்கி அல்லது துப்பாக்கியை பற்றிய தகவலை வாங்குபவர்களுக்கு பணப்பரிசாக ஐந்து இலட்சம் ரூபாயும், அடுத்த அதிகபட்ச தொகையான 3 இலட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments