Vettri

Breaking News

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம்!!!






தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிகளின் பெயர்களைக் கொண்ட பட்டியலைத் தொகுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.


சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சானக உதயகுமார அமரசிங்க, இந்த குற்றவாளிகள் சிறைத்தண்டனை முடிந்து குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டவுடன், மீண்டும் குற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது. இதனால் குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் அபாயம் காணப்படுகிறது.

இந்நிலையில் தண்டனை பெற்ற சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டோரின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, குழந்தைகள் அதிகமாக செல்லும் பகுதிகளுக்குள் அவர்கள் நுழைவதைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த சட்ட விதிகளை அறிமுகப்படுத்தலாமா என்று சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆலோசித்து வருகிறது.

2023 ஆம் ஆண்டில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.

2022 இல் பதிவாகிய 1,618 க்கு மாறாக கடந்த ஆண்டு, இலங்கையில் 1,639 பெண் குழந்தைகள் மீதான துஸ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், 2022 இல் பதிவான துஸ்பிரயோக சம்பவங்கள் 1,232 ஆக இருந்ததுடன், இது கடந்த ஆண்டு 1,497 ஆக உயர்ந்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

No comments