Vettri

Breaking News

தரமற்ற தடுப்பூசி விவகார வழக்கு: கெஹலியவுக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம்!!!




 முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் நால்வருக்கு எதிரான தடுப்பூசி விவகார வழக்கு நிறைவடையும் வரை அவர்களுக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (14) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிணை கோரிக்கை நிகராகரிக்கப்பட்டுள்ளது.

பிணை கோரிக்கை நிராகரிப்பு







இதன்போது, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரின் பிணை கோரிக்கையை நிராகரித்த மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.  

தரமற்ற தடுப்பூசி விவகார வழக்கு: கெஹலியவுக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம் | Bail Rejected For Keheliya

இதேவேளை, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி போட்ட சம்பவம் தொடர்பில் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் துசித சுதர்சன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments