பசில் பிரதமரா... ரணில் நன்கு அறிந்த விடயம் அம்பலம்!!!
ரணிலுக்கு ஆதரவளித்தால் பிரதமராக பசிலை நியமிக்க வேண்டும் என்ற கருத்து வந்தது. ஆனால் அது ஒன்றும் சரிவராது. ரணிலுக்கே அது நன்றாகத் தெரியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பசிலை சந்தித்த நபர்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகின்றது. இப்போதுதான் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ச வந்திருக்கின்றார். அவரை 25 எம்.பிக்கள் சந்தித்திருக்கின்றார்கள்.

சில ஆளுநர்கள் சந்தித்துள்ளனர். அவர்கள் இன்று தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக செயற்படுகின்றனர். பல கதைகள் இடம்பெறுகின்றன.
ரணிலுக்கு ஆதரவளித்தால் பிரதமராக பசிலை நியமிக்க வேண்டும் என்ற கருத்தும் வந்தது. ஆனால் அது ஒன்றும் சரிவராது. ரணிலுக்கே அது நன்றாகத் தெரியும்.
பசில் பிரதமர் என்று கூறிவிட்டு ரணில் தேர்தல் களத்தில் இறங்கினால் சொந்தக் காசில் சூனியம் வைக்கும் நிலைமையாகிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
No comments