புதிய மின் இணைப்பு – தவணை முறையில் செலுத்தும் வாய்ப்பு!!!
புதிய மின் இணைப்பு பெறுவதற்கு விதிக்கப்படும் கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கான வாய்ப்பு வழங்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம் தர்மசேன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்காக பயனாளர்கள் புதிய மின் கட்டண இணைப்புக்கான மொத்த கட்டணத்தில் 25 சதவீதத்தை செலுத்த வேண்டும்.
எஞ்சிய கட்டணத்தை 10 அல்லது 12 மாதங்களில் செலுத்த முடியும்.
இதற்கு பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளதுடன், உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்...
No comments