Vettri

Breaking News

ஓமானிலிருந்து இலங்கை திரும்பிய பெண்ணுக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்து தங்க நகைகளை அபகரித்த நபர்!!!




  ஓமானில் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை செய்துவிட்டு இலங்கை திரும்பிய பெண்ணை ஏமாற்றி அவரிடமிருந்த சுமார் பன்னிரெண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் உடைமைகளை அபகரித்துச் சென்ற நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


பேஸ்புக் ஊடாக குறித்த பெண்ணுடன் தொடர்பு கொண்ட சந்தேக நபர், அவருடன் நெருங்கிய உறவை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புத்தேகம மல்வனேகம பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய பெண் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஓமானில் வீட்டு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், ஒரு நபருடன் அவர் பேஸ்புக்கின் ஊடாக நட்பை வளர்த்துள்ளார்.

இந்நிலையில், தன்னை இராணுவத்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டு குறித்த நபர் நேற்று (11) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு குறித்த பெண்ணுடன் செல்ல வந்துள்ளார்.

இதன்போதே சந்தேக நபர், குறித்த பெண்ணுடன் கொழும்புக்கு வந்து அவரது வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கண்டிக்கு அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளார். இராணுவ முகாமுக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி கல்கமுவ பிரதேசத்துக்கு அழைத்துச் சென்று மதுபானம் கொடுத்து குறித்த பெண்ணை மயக்கமடையச் செய்து ஏழரை இலட்சம் ரூபா, தங்க நகைகள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் பணம் என்பவற்றை அபகரித்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கல்கமுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






No comments