Vettri

Breaking News

ஒட்டுசுட்டான் பகுதியில் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு!!




 முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பொலிஸார் சந்தேகநபரை நேற்று (14) கைது செய்துள்ளனர்.

டிப்பரின் சக்கரங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை தடுத்து நிறுத்தியதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்

பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த டிப்பர் வாகனம் பொலிஸாரை விபத்திற்குள்ளாக்க முயற்சித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments