ஹொண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!
மின்சார வாகனங்களின் உற்பத்தியை மேம்படுத்துவதுடன், தன்னியக்க தொழில்நுட்பத்தை சேர்ப்பதற்காக இணைந்து செயல்பட ஹொண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இரு நிறுவனங்களின் தலைவர்களும் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய கார் உற்பத்தியாளர்களான குறித்த இரு நிறுவனங்களும், எதிர்காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
No comments