புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் ஏற்பாட்டில் சேவகி குறுந்திரைப்படம் மற்றும் மகளிர் தின சிறப்பு விழா!!
மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் ஏற்பாட்டில் சேவகி குறுந்திரைப்படம் மற்றும் மகளிர் தின சிறப்பு விழா ஆகியன அகரம் தலைவர் செ.துஜியந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக புதுக்குடியிருப்பு கிராமசேவை உத்தியோகத்தர் திருமதி தயனி கிருஸ்ணாகரன் கலந்து கொண்டார். அத்துடன் கலாசார உத்தியோகத்தர் பரமேஸ்வரன், கவிஞர் கு.கிலசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இங்கு சமூக சேவை செய்யும் பெண் ஒருவருக்கு சமூக வலைத்தளங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பில் உருவான சேவகி என்ற குறுந்திரைப்படம் வெளியீட்டு வைக்கப்பட்டது.
அகரம் செ.துஜியந்தன் இயக்கத்தில் நடிகை தயனி நடிப்பில் வெளியான இக் குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு உரையினை பல்துறைக்கலைஞர் கு.கிலசன் நிகழ்த்தினார். பாடகர் பரமேஸ்வரனால் பெண் சுதந்திரம் தொடர்பான பாடல்கள் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
No comments