Vettri

Breaking News

இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை!!




 செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் இருவரையும் விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியாவிற்கான இலங்கை தூதுவரால் இருவரையும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என வெளிவெளிகார அமைச்சு கூறியுள்ளது.

குறித்த இருவரும் தற்போது ஜிபுட்டியில் தங்கியுள்ளனர்.

சீனாவிலிருந்து ஜெட்டா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த   வணிகக் கப்பல் மீது கடந்த வியாழக்கிழமை ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கப்பலில் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் இருந்துள்ளனர். அவர்களில் இருவர் இலங்கையர்களாவர்.  

கப்பலில் இருந்த பணியாளர்கள், இந்திய கடற்படைக்கு சொந்தமான கொல்கத்தா போர்க் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments