Vettri

Breaking News

பூச்சாடிகள் வழங்கி வைப்பு!!







பாண்டிருப்பு நிருபர் 

இன்று மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்கள் மற்றும் புதிதாக வருகைதந்தவர்கள் ஆகியோரை பாராட்டி கெளரவிக்கும்  நிகழ்வு  வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். 

இங்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஊழியர்களினால் வலயக் கல்விப் பணிமனையை அழகுபடுத்தும் வகையில் பூச்சாடிகள் வழங்கி வைக்கப்பட்டது.

No comments