கனடா உயர் ஸ்தானிகர் : அநுரகுமார இடையே முக்கிய சந்திப்பு!!
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) Patrick Pickering மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்துள்ளனர்.
சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில்
இச்சந்திப்பில் இலங்கையின் தற்போதைய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
கனடாவில் வசிக்கும் இலங்கையர்களை சந்திப்பதற்காக கனடாவிற்கு விஜயம் செய்யவுள்ள அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்களை உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாகவும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
No comments