Vettri

Breaking News

அனுமதியின்றி ட்ரோன் கெமராவினை வானில் பறக்கவிட்ட இளைஞன் ஒருவர் கைது!!




 கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இரணைமடு குளம் அருகில் அனுமதியின்றி ட்ரோன் கெமராவினை வானில் பறக்கவிட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தை சேர்ந்த 24 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

No comments