Vettri

Breaking News

நாடு முழுவதும் இரத்தினக்கற்களை கண்டறிய நடவடிக்கை!!!




 எதிர்காலத்தில் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் மாணிக்கக் கல் அகழ்வு பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


இதன்படி, இலங்கையின் இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு அந்த பகுதிகளில் சுரங்க தொழில்களை ஆரம்பிக்க பூரண வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மாணிக்கக்கல் மற்றும் சுரங்க வியாபாரத்தை ஆரம்பிக்க முடியுமா என்பது தொடர்பில் கணக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகள், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலைப் பாதித்துள்ள பிரச்சினைகள் மற்றும் தொழில் தொடர்பான ஏனைய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

No comments