உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் மைத்திரியிடம் சி.ஐ.டி வாக்குமூலம்!!
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் இன்று (24) வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டியில் கடந்த (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, , ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலான உண்மை தனக்கு தெரியும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments