Vettri

Breaking News

லபுக்கலையில் வேன் - முச்சக்கர வண்டி மோதி நெதர்லாந்து நாட்டு பிரஜைகள் காயம்!!!






 நுவரெலியா கொழும்பு  பிரதான வீதியின் லபுக்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 

நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்று எதிர்த் திசையில் கண்டியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த  முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

விபத்தில் முச்சக்கர வண்டியின் பயணம் செய்த நெதர்லாந்து நாட்டு பிரஜைகள் இருவர் பலத்த  காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேனில் பிரேக் முறையாக இயங்காமை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் , விபத்தின்போது எட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வேனில் இருந்ததாகவும் சாரதியின் கவனக்குறைவே விபத்திற்கான காரணமென தெரிவித்த நுவரெலியா போக்குவரத்து  பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments