இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணி விரைவில்........
சிறிலங்கா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணி விரைவில் நிறைவடையுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையிலேயே, அமைச்சின் செயலாளர் வியனி குணதிலக இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள ஊடகங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் இணையவழி பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இணையவழி பாதுகாப்பு சட்டம்
இந்த சட்டம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சிறிலங்கா பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியனி குணதிலக தெரிவித்துள்ளார்.
இதனால் குறித்த சட்டம் தற்போது சட்டவரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள்
திருத்தப்பட்ட சட்டம் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, குறித்த சட்டமூலம் சட்ட மா அதிபரிடம் ஆலோசனைகளுக்காக அனுப்பப்படுமென அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அமைச்சரவை அனுமதிக்காக திருத்தப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுமென வியனி குணதிலக தெரிவித்துள்ளார்.
No comments