மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணம் குறைக்க தீர்மானம்!!
மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணத்தை 3000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மின் இணைப்பு மீளமைக்கப்படும் போது வாடிக்கையாளர்கள் செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மின் கட்டணம் குறைக்கப்பட்டதால் தற்போது 30 அலகு (unit) பயன்படுத்தும் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய தொகை 540 ரூபாயிலிருந்து 390 ரூபாவாக குறைந்துள்ளது.
60 அலகுகளை பயன்படுத்தும் ஒருவர் செலுத்த வேண்டிய தொகை 1,620 ரூபாயிலிருந்து 1,140 ரூபாயாக குறைந்துள்ளது.
90 அலகுகளை பயன்படுத்தும் ஒருவர் செலுத்த வேண்டிய தொகை 3,990 ரூபாயிலிருந்து 2,800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
No comments