ரயிலில் மோதி ஒருவர் பலி!!
மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்வத்த மற்றும் அம்பேபுஸ்ஸ ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.
கொழும்பில் இருந்து ரம்புக்னை நோக்கி பயணித்த ரயிலில் மோதியே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 62 வயதுடையவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததுடன், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments