இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை...
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 300 ரூபாயில் இருந்து 265 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 190 ரூபாவில் இருந்து 175 ரூபாவாகவும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 350 ரூபாயிலிருந்து 285 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன.
தற்போது தங்களிடம் போதியளவு வெள்ளை சீனி, கோதுமை மாவு மற்றும் பருப்பு கையிருப்பு உள்ளதாகவும், வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை தடையின்றி வாங்க முடியும் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் மொத்த விலைகள் குறைந்துள்ள போதிலும், சில பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் அந்த பொருட்களின் விலைகள் குறைவடையவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
No comments