எதிர்காலத்தில் சாதாரணதர பரீட்சை எழுதப்போகும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
எஞ்சிய மூன்று பாடங்கள் தொழில் மற்றும் சுற்றாடல் அறிவை வழங்குவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளில் எந்தவொரு பிள்ளையும் சித்தியடையும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தொழில்சார் பயிற்சி
மாணவர்களின் விருப்பங்களையும் திறமைகளையும் வெளிப்படுத்தும் பாடப் பிரிவுகளில் தொழில்சார் பயிற்சிகளைப் பெறுவதற்குத் தேவையான பின்னணியைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 3,37,000 மாணவர்களில் 50,000 மாணவர்களுக்கு ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டல் பயிற்சி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
No comments