ரணில், அனுர தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் கட்டளை!
கடந்த அரசாங்கத்தின் போது நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் விசாரணை ஆணைக்குழுவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கண்டறிதல்களை செல்லுபடியற்றதாக்கி, மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன உள்ளிட்ட மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றக் குழுவினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
No comments