Vettri

Breaking News

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்!




 கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு  அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றின் போராட்டம் காரணமாக கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு  முன்பாக உள்ள வீதி போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

No comments