பொதுத் தேர்தலுக்கான திகதிகள் எப்போது?
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் பொதுத் தேர்தலுக்கான திகதிகள் அறிவிக்கப்படும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு சலுகைகள் காரணமாக எதிர்வரும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அமைச்சர்கள் சிலர் அறிவித்துள்ள போதிலும், கிராம மட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்து அதுவல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
“.. தமிழ் சிங்கள புத்தாண்டு முடிவடைந்த பின்னர் பொதுத் தேர்தலுக்கான திகதி நிர்ணயம் செய்யப்படும் என உறுதியாக கூறமுடியும்.. பொதுத் தேர்தலில் பொஹட்டுவ பெரும்பான்மையை வெல்லும் என்பதில் உறுதியாக உள்ளோம். பசில் ராஜபக்ஷ அவர்கள் பொஹட்டுவவை வழிநடத்தத் தயாராக இருக்கின்றார். பசில் ராஜபக்ஷவை வரவேற்க மக்கள் வந்தனர். 50க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் வந்தார்கள். அது நல்லது. இது ஒரு ஆரம்பம் மட்டும் தான்..
எங்கள் கட்சியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க வந்தால் இரண்டரை லட்சத்தில் 50,000 பேர் சேர்க்கப்படும். சிலர் அமைச்சுப் பதவிகளை தக்கவைத்துக் கொள்ள இந்நாட்களில் இழுத்தடித்து வேலை பார்க்கின்றனர்.. ஆனால் கிராமத்து மக்கள் அனைத்தையும் அறிந்தவர்கள்…”
மக்கள் ஆணையை அழித்த பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
No comments