Vettri

Breaking News

புத்தாண்டுக்கு முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் : பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!!!




 நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்படும் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன பலவீனமான வேட்பாளரை அதிபர் வேட்பாளராக களமிறக்கினால் கட்சியில் இருந்து விலகி அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவேன் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்பு

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எமக்கும் அரசியல் கொள்கை ரீதியில் பாரியதொரு வேறுபாடுகள் காணப்படுகிறது.

நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த போது எதிர்கால அரசியல் பற்றி ஆராய்ந்துகொண்டு சோதிடம் பார்த்துக்கொண்டிருக்காமல் தனி மனிதனாக ரணில் விக்ரமசிங்க பாரிய சவால்களை ஏற்றுக் கொண்டார்.

புத்தாண்டுக்கு முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் : பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு | Essential Commodities Price Will Come Down

2022ஆம் ஆண்டைக் காட்டிலும் சமூக கட்டமைப்பு தற்போது மாற்றமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு என்ற குற்றச்சாட்டு மாத்திரம் முன்வைக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது, புத்தாண்டுக்கு முன்னர் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும், நாட்டையும் நாட்டு மக்களையும் பொருளாதார நெருக்கடியில் இருந்து பாதுகாத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டு மக்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.

அரசாங்கத்தை பொறுப்பேற்காதவர்கள் 

பொருளாதார நெருக்கடியின் போது அரசாங்கத்தை பொறுப்பேற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் முன்வரவில்லை.

புத்தாண்டுக்கு முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் : பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு | Essential Commodities Price Will Come Down 

நாட்டு மக்கள் சஜித் பிரேமதாச அல்லது அனுர குமார திசாநாயக்கவை அதிபராக தெரிவு செய்ததன் பின்னர் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியை போன்று பொருளாதார நெருக்கடியான சூழல் ஒன்று ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு அதனை சமாளிப்பார்கள்.

ஆகவே மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்படும். அதிபர் வேட்பாளராகவோ அல்லது பொதுவேட்பாளராகவே அதிபர் ரணில் விக்ரமசிங்க களமிறக்கப்பட வேண்டும் என்பதை பொதுஜன பெரமுனவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர்

பலவீனமான வேட்பாளரை அதிபர் வேட்பாளராக பொதுஜன பெரமுன களமிறக்கினால் கட்சியில் இருந்து விலகி அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவேன்.

புத்தாண்டுக்கு முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் : பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு | Essential Commodities Price Will Come Down 

அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகைமை உள்ளவர் ஒருவர் பொதுஜன பெரமுனவில் தற்போது இல்லை. கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகைமையற்றவர். இதனை நான் அவரிடமே குறிப்பிட்டுள்ளேன்”  என தெரிவித்தார்.

No comments