லஹிரு திரிமான்ன விபத்தில் காயமடைந்தார்...!!
முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் - திரப்பனே வீதியில் 117 ஆம் இலக்க மைல்கல் அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் பயணித்த கார் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த லஹிரு திரிமான்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்....
No comments