நாளை முதல் அரசாங்கம் நெல் கொள்வனவு
நாளை முதல் அரசாங்கம் நெல் கொள்வனவை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அம்பாந்தோட்டையில் இருந்து நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அரசாங்கத்திடம் இருந்து இதுவரை உதவிகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் எதிர்வரும் வாரத்திலேனும் தமக்கான உதவிகள் கிடைக்கப்பெறுமென நம்புவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அந்த உதவிகள் கிடைக்கப்பெறாத பட்சத்திலும், அமைச்சின் நிதியினூடாக நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
No comments