மாணவன் உள்ளிட்ட குழுவினரால் இரு ஆசிரியர்கள் மீது தாக்குதல்..!!!
கல்னேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட குழு ஒன்றினால் இரு ஆசியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்னேவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இடையில் நேற்று (6) தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது இந்த பாடசாலையில் இருந்த விளையாட்டு ஆசிரியர் ஒருவர் தகராறில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவரை தாக்கியுள்ள நிலையில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த மாணவனை பார்வையிடுவதற்காக குறித்த விளையாட்டு ஆசிரியர் மாணவனின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில்,
வீட்டிலிருந்த அந்த மாணவன் உள்ளிட்ட குழுவொன்று விளையாட்டு ஆசிரியரை பலமாக தாக்கியுள்ளனர்.
இதேவேளை , தாக்குதலுக்குள்ளான விளையாட்டு ஆசிரியர் தொடர்பில் விசாரிப்பதற்காக இந்த பாடசாலையின் மற்றுமொரு ஆசிரியர்,
குறித்த மாணவனின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் அக்குழுவினர் அந்த ஆசிரியர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபரான மாணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலுடன்,
தொடர்புடைய ஏனையவர்கள் தொடர்பில் கல்னேவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments