Vettri

Breaking News

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை கல்விசார் ஊழியர்களின் கீழ் நியமிக்கவேண்டும். - எம்.எஸ் தௌபீக் எம்.பி கோரிக்கை..!!!




(எஸ். சினீஸ் கான்)




2019 ம் ஆண்டு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு கடமையில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தற்போது பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் அவர்கள் மாணவர்களது தொடர்புபட்டு செயற்படுவதால் அவர்களை கல்விசார் ஊழியர்களின் கீழ் கொண்டுவரவேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.

புதன்கிழமை (7) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தர்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,  விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை கல்விசார் ஊழியர்களாக நியமிக்கப்பட்டு கஷ்ட, அதிகஷ்ட கொடுப்பனவுகளை வழங்கநடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் அதிபர், ஆசிரியர் போன்று அவர்களையும் தனி ஒரு பிரிவாக்க கல்விசார் ஊழியர்களுக்குள் உள்ளடக்கவேண்டும். அதேபோல் அவர்களுக்கான கடமை நேரமான ஒரு நாளைக்கு இரண்டு பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளது இலங்கையில் எந்தவொலு அரச ஊழியர்களுக்கு இவ்வாறு வழங்கப்படவில்லை இதனால் அவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் இதனை கருத்திற்கொண்டு அக்கடமை நேரமானது ஒரு நேரமாக மாற்றிக்கொடுக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும், அவர்கள் உடற்கல்வி மற்றும் விளையாட்டு சார்ந்த டிப்ளோமா, உயர்டிப்ளோமா, பட்டப்படிப்புக்களை நிறைவு செய்தபின் பதவி உயர்வுகள் வழங்கவேண்டும் எனவும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கங்களை உரிய அதிகாரிகள் அழைத்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


மேலும் அவரது உரையில், VAT அதிகரிப்பினால் மக்கள் பல நெரிக்கடிகளுக்கு உள்ளாகியிருப்பதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை முடியாத நிலை காணப்படுவதாகவும், மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அவரது உரையில், அஸ்வெசும கொடுப்பனவுக்கான பயனாளிகள் தெரிவில் முறைகேடுகள் காணப்படுவதாக உரிய அதிகாரிகள் அதனை கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்

No comments