Vettri

Breaking News

சடுதியாக அதிகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள்! விலை விபரங்கள் உள்ளே........




 நாடாளாவிய ரீதியில் இன்று (02) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு உணவுப் பொருட்களின் விலையை  அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக  அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்சான் இதனை தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பின் காரணமாக இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விலை அதிகரிப்பு

 இதன்படி, ஒரு சாதாரண தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாயினாலும், பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சடுதியாக அதிகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள்! விலை விபரங்கள் உள்ளே... | Sri Lanka Hotel Food Price

மேலும் மதிய உணவுப் பொதி ஒன்றின் விலை 25 ரூபாயினாலும்,கொத்துரொட்டி மற்றும் ப்ஃரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 50 ரூபாயினாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நுகர்வுப் பொருட்களின் விலையை எந்த வகையிலாவது குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என ஹர்சன ருக்ஷான் மேலும் தெரிவித்தார்.

No comments