அரசியல்வாதிகள் நாட்டின் தற்காலிக பாதுகாவலர்களே - சஜித் பிரேமதாச தெரிவிப்பு !!
இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி இந்நாடு அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமானது. இந்நாடு எந்தத் தலைவருக்கும் எழுதிக் கொடுப்படவில்லை. அரசியல்வாதிகள் இந்நாட்டின் தற்காலிக பாதுகாவலர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முழு நாடும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் சொந்தம் என்பது போல் சிலர் நடந்து கொள்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக இந்நாட்டின் உரிமை ஒரு குடும்பத்திற்கு மட்டுமே என்று நினைப்பது தவறு. இந்நாடு ஒரு குடும்பத்திற்கோ அல்லது உறவினர்களுக்கோ சொந்தமானது அல்ல, இந்நாடு அனைத்து இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த 220 இலட்சம் சிங்கள தமிழ் முஸ்லிம் பர்கர் பிரஜைகளுக்கு சொந்தமானது எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கட்சிகளின் உரிமைகள் தந்தையிடமிருந்து மகனுக்கும் பின்னர் பேரனுக்கும் என வரையறுக்கப்பட்டுள்ளன. சில அரசியல் கட்சிகளால் இவ்வாறு நடந்து கொள்ள முடியுமாக இருந்தாலும், 220 இலட்சம் மக்களுக்கே இந்நாடு உரித்துடையது. இது எல்லா மதத்தினருக்கும் எல்லா இனத்தினருக்கும் சொந்தமானது. இனங்கள் மதங்கள் இடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும். மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையே வேறுபாடுகளை பிரிவினைகளை உருவாக்கி எம்மால் முன்னேற முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 136 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், வவுனியா,நெடுங்கேணி ஒலுமடு தமிழ் வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மார்ச் 28 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளை பெறுவதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.
நாட்டின் உரிமை எந்தக் குடும்பத்துக்கும் தனித்து சொந்தமானதல்ல. 220 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்து தற்காலிக பாதுகாவலர்களாக பணியாற்ற வேண்டும்.
ஸ்மார்ட் கல்வியின் மூலம் ஸ்மார்ட் இலங்கை உலகில் முதல் ஸ்தானத்திற்கு இட்டுச் செல்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
யுத்தம் நிறைவடைந்த பல நாடுகளின் அரச தலைவர்கள் சர்வதேச ஒத்துழைப்பு மாநாடுகளை நடத்திய போதிலும், இந்நாட்டில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்றன. சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டை இன்னும் நம் நாட்டு தலைவர்களால் நடத்த முடியாது போயுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இத்தகைய ஒத்துழைப்பு மாநாட்டை நடத்த எதிர்பார்க்கிறோம். அழிந்து போன உட்கட்டமைப்பு வசதிகளையும் மக்களின் வாழ்க்கையையும் மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நாட்டில் பெரும்பாலான மக்கள் முறைமையில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இந்த முறைமையில் மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தியே ஆரம்பித்து வைத்துள்ளது. சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளாக எந்த எதிர்க்கட்சியும் ஆற்றாத பணியை ஐக்கிய மக்கள் சக்தி ஆற்றிவருகிறது. அதிகாரம் இல்லாமல் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே முன்னைடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
டொலர் தட்டுப்பாடு நிலவும் இந்த வங்குரோத்து நாட்டில் கல்வி, சுகாதாரத்துறைக்கு தற்போதுள்ள அரசால் கூட செய்ய முடியாத சேவையை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது. இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி, அந்தஸ்து என பிளவுபட்டு வாழும் இலங்கை மக்கள், ஒரே தாய் தந்தையரின் பிள்ளைகளாக ஒன்படும் யுகத்தை ஆரம்பிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
No comments