ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறை!!
பொதுபல சேனா பொதுச் செயலாளர் குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு 100,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே மேலும் உத்தரவிட்டார்.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குரகல விகாரை தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் இலங்கையில் மத மற்றும் இன ஒற்றுமையை சீர்குலைத்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
No comments